Friday 23 November 2012

ஆஹா கவிதை கவிதை

ஆஹா கவிதை கவிதை
என் முதல் கவிதை ஆரம்பம் இப்படித்தான்!

யாழ்பாணத்தில் மாணவிகள் tuitionக்கு போகும்போது மாணவர்கள் bicycleல் நின்றுகொண்டு மாணவிகளுக்கு sightஅடிப்பது எல்லாரும் அறிந்த விடயம். அவ்வாறு side அடிப்பதற்கு என் நண்பன் செல்லும்போது என்னையும் துணைக்கு அழைத்தான். அவனுக்கு தெம்புக்கு ஒரு ஆள் தேவை. நான் சிறுவயதில் colomboஇல் பலகாலம் இருந்து விட்டு அண்மையில் யாழ்பாணம் வந்தனான்.இது எனக்கு கொஞ்சம் புதுசு. இருந்தாலும் போய்தான் பார்ப்போமே என்று அவனுடன் புறப்படேன். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நான் இதை கூடவா செய்யமாட்டேன்.இருவரும் ஒன்றாக cycleல் புறபட்டோம். ஓரங்கட்டை சந்தி வந்ததும் cycleய் மெதுவாய் நிறுத்திவிட்டு அவனின் கனவுகன்னயின் வருகைக்காக காத்திருந்தோம்.

தூரத்தில் ஒரு தலைகருப்பு தெரிந்தது.அவன் நிலைகொள்ளாமல் தவித்தான்.அதோ "அவள் வாறாள் அவள் வாறாள்" முனிகினான். எனக்கு ஒருவரையும் தெரியவில்லை.ஏன் இப்படி அவதிபடுகிறான் என யோசித்தேன். இல்லை அவன் சொன்னது சரிதான். ஒரு பெண்குயில் ஒன்று தூரத்தே தெரிந்தாள். ஆஹா என்ன நடை. அது அன்ன நடை.இப்போது என்னும் அருகே வந்துவிட்டாள். முகம் சந்திரவதனம். என் நண்பன் அந்த பெண்ணை sight அடிப்பதில் என்ன தப்பு? அந்த அழகுதேவதைய் கண்டால் யாருக்குத்தான் காதல் வரரது. ஆம் எனக்கும் அவள் மீது காதல் வந்துவிட்டது.
அது நட்பு துரோகம் அல்லவா. நண்பனின் காதலி எனக்கும் காதலியா? நான் என்ன செய்ய அவளின் நடை, அழகு, அவளின் இடைஅழகு,அவளின் முகஅழகு இதற்கு வேறு என்ன பதில்? என்னயும் அறியாமல் என்னுள் காதல் வேறுன்றி விட்டது.என் மனதில் ஒரே பாரதபோர். நட்பா காதலா
இப்போது அப்பெண்மையில் எங்களை கடந்து செல்கின்றாள். நட்பு பாதாளம் நோக்கி போகின்றது. காதல் இறக்கை கட்டி பறக்கின்றது. அது மட்டுமா கவிதை கவிதை எனக்கு அருவியாக பெருகெடுகின்றது.


பெண் அவளை கண்டேன்
பெரும்சாலை ஒன்றில்
அன்னநடை நடந்து சென்றாள்
அவனி நோகவண்ணம்

சின்னஇடை ஒடிந்திடுமோ
என்று நான் ஏங்க
சிரிப்பு ஒன்றை சிந்திட்டாள்
சிந்தை குளிரும் வன்ணம்

மன்னவனின் மனமதனை
கவர்ந்துவிட்ட நங்கை
மறுநாளும் வருவாளோ
என்று இவன் எண்ணம்

பிறகு என்ன இருவரும் சேர்ந்தே காதலித்தோம். அவளுக்கு குழப்பம் எங்களில் யார் தன்னை காதலிக்கிறார் என்று.. எங்களுக்கு குழப்பம் எங்களில் யாரை அவள் பார்க்கின்றாள். எங்களுக்குள் அடிகடி சண்டை. ஆனால் தனியே காதலிக்க திராணிஇல்லை.சேர்ந்தே காதலித்தோம். இறுதியில் காதலா வென்றது இல்லை நட்பா வென்றது. இது நடந்தது 33 ஆண்டுகளுக்கு முன்பு.

இப்போது நாம் இருவரும் இருவேறு தேசங்களில். எம் காதலி இன்னொரு தேசத்தில். அனால் இபோதும் நாம் நண்பர்கள் இடைக்கிடை பேசிக்கொள்வோம். இப்பொதும் காதலிகின்றோம்  ஆனால்  ஒரு வித்தியசம். எமது மனைவியை. கள்ளமில்லாத நட்பு களங்கமில்லாத காதல். வாழ்க காதல் வளர்க நட்பு .

No comments:

Post a Comment