Monday 17 December 2012

ஏக்கம்


தெருவில் தெரியும் முகங்களில் எல்லாம்

உன்முகத்தை தேடி அலைகின்றேன்

ஆர்பரிக்கும் அலைகடல் அருகிலும்

உன் குரலை கேட்க விளைகின்றேன்

 

வானத்தில் உள்ள நட்சத்திரங்களை

ஒவ்வொன்றாய் எண்ணுகின்றேன்

அதில் உன் கண்சிமிட்டலை தேடுகின்றேன்

உன் காது சிமிக்கியை காண்கின்றேன்

 

இந்த பூமியும் வானும் மறைந்தாலும்

உந்தன் புன்னகை எனைவிட்டு பிரியாது

அந்த காற்றும் மின்னலும் தொலைந்தாலும்

உன் கண்ணசைவு என்னை விட்டு அகலாது

 

கண்ணே உன்னை காணும்மட்டும்

என் கற்பனை உன்நினைவுடன்தான் உறவாடும்

காலங்கள் உருண்டு ஓடினாலும்

உன்கோலங்கள் எனை விட்டகலாது

Friday 30 November 2012

கல்லுக்குள் ஈரம்

 
நானும் தம்பியும் பாடசாலை முடிந்து வீடுக்குள் வந்தோம். எமது வீட்டு தென்னை மரத்தில் ஒருவன் தேங்காய் பீடிங்கிகொண்டிருந்தான்.எங்களுக்கு மஹா கோவம். வீடுக்குள் சென்று அப்பாவிடம் முறையிட்டோம். "பசில் தென்னை மரத்தில் ஏறி நிக்கிறான்". அப்பா பெரிதாக அதனை கவனத்தில் எடுக்கவில்லை. எங்களுக்கு இன்னும் கோபம் ஏறியது. திரும்பவும் அப்பாவிடம் வீறிட்டோம். எங்கள் அலறலை தவிர்க்க முடியாமல் அப்பா முன்முத்ததிக்கு போனர். பசில் அப்பாவை கண்டவுடன் தேங்காய் இரண்டு புடுங்கவா என கேட்டான். அப்பா சரி ஆனால் இனி புடுங்ககூடாது என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார்.எங்களுக்கு கோபம் தணியவில்லை. யாராவது மரத்தில் இருந்து கொண்டா தேங்காய் புடுங்க அனுமதி கேட்பார்கள். எங்களுக்கு அப்பா பசில் இருவர் மீதும் கோபம்.

பசில் வேறு யாரும் அல்ல. எமது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய வீட்டில் வசிப்பவன். அவன்தான் களுபோவில சண்டியன். ஒரு சண்டியனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது எமக்கு அத்துபடி. கடைகளில் கப்பம் கேட்பது. கப்பம் தராவிட்டால் கடை கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது.குடித்து வந்து சத்தம் போடுவது. போலீஸ் தேடிவந்தால் மதகுக்கு கீழ் ஒழிப்பது. சண்டை பிடித்துவிட்டு இரத்தம் ஒழுக வந்து காயங்களுக்கு மருந்து போடுவது.இவை நாளாந்தம் நடப்பது.

எமது களுபோவில வீடு மிகவிசாலமானது. அது அப்பாவின் quarters.பெரிய இரண்டுமாடி வீடு, பெரிய வளவு. வளவு முழுக்க இரபலா, தென்னை, மாமரம் பாக்கு butterfruit என எல்லாம் இருந்தன. Colomboஇல் அவ்வாறு இருப்பதை யாரும் இப்போது கற்பனை செய்தும் பார்க்க முடியாது.எமது வீட்டில் எராளமான அறைகள். யார் வந்தாலும் தங்க இடம் உண்டு. எமது வீட்டை வராத உறவினர்கள் இல்லை என்றே கூறலாம். ஆனாலும் எனக்கு மிக நெருக்கமான உறவினர்கள் அங்கு வரவில்லை என்பது எனக்கு குறை.அதற்கு அப்பாவின் கோபமே காரணம். பசில் தேங்காய் இரப்பலா புடுங்குவது எங்களுக்கு பிடிக்கவில்லை. அதை தவிர எங்களுக்கு அந்த வீடு சகல வசதிகளும் கொண்டது.

எமது இளமைகாலம் அந்த களுபோவில நகரத்தில்தான். எம்மை தவிர இரண்டு தமிழ் குடும்பங்களே எமது வீதியில் இருந்தன. 1977 election இல் TULF அமோக வெற்றி பெற்றது. புதுஆட்சியில் ஜூலை எதிர்கட்சியாக பதவி ஏற்றது. ஆகஸ்டில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. நாம் பார்க்க களுபோவில hospital டாக்டர் nurse எல்லோருக்கும் நல்ல அடி விழுந்தது. hospital mortuaryயில் panadura மொறட்டுவவில் இருந்து இறந்தவர் சடலங்கள் வந்து நிறைந்தன. நாம் பார்த்துகொண்டிருக்க எமது வீட்டில் இருந்து ஆறு வீடு தள்ளிருந்த தமிழ் பிசினஸ்மானின் வீடு சூறையடபட்டது.வீட்டில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

நாங்கள் பயந்தாலும் எங்களுக்கு அந்த வீட்டை விட்டு எங்கே போவது. நாம் என்ன செய்வது எனறு கலங்கி கொண்டிருக்கையில் பசில் சொல்லாமல் கொள்ளாமல் வீடுக்குள் வந்தான். அப்பா எங்கே என்று கேட்டான். எங்கள்ளுகு கேட்காமல் அவன் வீட்டின்உள்ளே வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பாவிடம் திமிராக நான் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துகொள்கின்றேன் என்று கூறிவிட்டு போய்விட்டான். எங்களுக்கு அவனை நம்புவதா இல்லை நாடகம் ஆடுகின்றனா என்று விளங்கவில்லை.

இப்படியே இரண்டு நாள் கழிந்தது. மறுநாள் இரவு எமது வீட்டை சுற்றி வாள், பொல்லு நெருப்பு பந்தங்கள்உடன் 20க்கு மேற்பட்ட காடையர்கள் ஜன்னல் உடாக தெரிந்தனர். ஒரே சத்தம். நாம் உயிரை கையில் பிடித்துகொண்டு அவதானித்தோம். பசிலின் சத்தமும் பெரிதாக கேட்டது. அதைவிட ஊராரின் சத்தமும் கேட்டது. அன்று இரவு அப்படியே கழிந்தது.

அடுத்தநாள் காலை பசில் வீட்டினுள் வந்தான். அப்பாவிடம் மாத்தையா இரவு விகாரலேன்இல் இருந்து உங்களை கொல்ல கடையார் வந்தார்கள். நானும் உரரரும் தடுத்து நிறுத்திவிட்டோம். எங்களை கொல்வதனால் அதை எம்உரர்தான் செய்யவேண்டும். விகாரலேன்இல் இருந்து நீங்கள் வரதேவையில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டோம். இன்று இரவு அவர்கள் மீண்டும் வருவார்கள். அப்போது உங்களை நாங்கள் காப்பாற்றமுடியாது . எனவே போவதற்கு ஏற்பாடுசெய்யுங்கள் என்று கூறினான்.அதன்பின்னர் அப்பா அவனுடையே போலீஸ்ஸ்டேஷன் சென்று போலீஸ் ஜீப் எங்களுக்கு காவலுக்கு வர நாங்கள் பம்பலபிடிய சரஸ்வதிஹால் அகதிமுகாம் சென்று அடைந்தோம்.

சண்டியன் என்று நாம் அன்றாடம் வெறுத்தவனுடைய மனிதம் என்மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எவ்வளவு எளியவனாக இருந்தாலும் சுற்றம் ஆகிய எம்மை அவன் இயன்றவரை பாதுகாற்றது மறக்கமுடியாதது.

Friday 23 November 2012

ஆஹா கவிதை கவிதை

ஆஹா கவிதை கவிதை
என் முதல் கவிதை ஆரம்பம் இப்படித்தான்!

யாழ்பாணத்தில் மாணவிகள் tuitionக்கு போகும்போது மாணவர்கள் bicycleல் நின்றுகொண்டு மாணவிகளுக்கு sightஅடிப்பது எல்லாரும் அறிந்த விடயம். அவ்வாறு side அடிப்பதற்கு என் நண்பன் செல்லும்போது என்னையும் துணைக்கு அழைத்தான். அவனுக்கு தெம்புக்கு ஒரு ஆள் தேவை. நான் சிறுவயதில் colomboஇல் பலகாலம் இருந்து விட்டு அண்மையில் யாழ்பாணம் வந்தனான்.இது எனக்கு கொஞ்சம் புதுசு. இருந்தாலும் போய்தான் பார்ப்போமே என்று அவனுடன் புறப்படேன். நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நான் இதை கூடவா செய்யமாட்டேன்.இருவரும் ஒன்றாக cycleல் புறபட்டோம். ஓரங்கட்டை சந்தி வந்ததும் cycleய் மெதுவாய் நிறுத்திவிட்டு அவனின் கனவுகன்னயின் வருகைக்காக காத்திருந்தோம்.

தூரத்தில் ஒரு தலைகருப்பு தெரிந்தது.அவன் நிலைகொள்ளாமல் தவித்தான்.அதோ "அவள் வாறாள் அவள் வாறாள்" முனிகினான். எனக்கு ஒருவரையும் தெரியவில்லை.ஏன் இப்படி அவதிபடுகிறான் என யோசித்தேன். இல்லை அவன் சொன்னது சரிதான். ஒரு பெண்குயில் ஒன்று தூரத்தே தெரிந்தாள். ஆஹா என்ன நடை. அது அன்ன நடை.இப்போது என்னும் அருகே வந்துவிட்டாள். முகம் சந்திரவதனம். என் நண்பன் அந்த பெண்ணை sight அடிப்பதில் என்ன தப்பு? அந்த அழகுதேவதைய் கண்டால் யாருக்குத்தான் காதல் வரரது. ஆம் எனக்கும் அவள் மீது காதல் வந்துவிட்டது.
அது நட்பு துரோகம் அல்லவா. நண்பனின் காதலி எனக்கும் காதலியா? நான் என்ன செய்ய அவளின் நடை, அழகு, அவளின் இடைஅழகு,அவளின் முகஅழகு இதற்கு வேறு என்ன பதில்? என்னயும் அறியாமல் என்னுள் காதல் வேறுன்றி விட்டது.என் மனதில் ஒரே பாரதபோர். நட்பா காதலா
இப்போது அப்பெண்மையில் எங்களை கடந்து செல்கின்றாள். நட்பு பாதாளம் நோக்கி போகின்றது. காதல் இறக்கை கட்டி பறக்கின்றது. அது மட்டுமா கவிதை கவிதை எனக்கு அருவியாக பெருகெடுகின்றது.


பெண் அவளை கண்டேன்
பெரும்சாலை ஒன்றில்
அன்னநடை நடந்து சென்றாள்
அவனி நோகவண்ணம்

சின்னஇடை ஒடிந்திடுமோ
என்று நான் ஏங்க
சிரிப்பு ஒன்றை சிந்திட்டாள்
சிந்தை குளிரும் வன்ணம்

மன்னவனின் மனமதனை
கவர்ந்துவிட்ட நங்கை
மறுநாளும் வருவாளோ
என்று இவன் எண்ணம்

பிறகு என்ன இருவரும் சேர்ந்தே காதலித்தோம். அவளுக்கு குழப்பம் எங்களில் யார் தன்னை காதலிக்கிறார் என்று.. எங்களுக்கு குழப்பம் எங்களில் யாரை அவள் பார்க்கின்றாள். எங்களுக்குள் அடிகடி சண்டை. ஆனால் தனியே காதலிக்க திராணிஇல்லை.சேர்ந்தே காதலித்தோம். இறுதியில் காதலா வென்றது இல்லை நட்பா வென்றது. இது நடந்தது 33 ஆண்டுகளுக்கு முன்பு.

இப்போது நாம் இருவரும் இருவேறு தேசங்களில். எம் காதலி இன்னொரு தேசத்தில். அனால் இபோதும் நாம் நண்பர்கள் இடைக்கிடை பேசிக்கொள்வோம். இப்பொதும் காதலிகின்றோம்  ஆனால்  ஒரு வித்தியசம். எமது மனைவியை. கள்ளமில்லாத நட்பு களங்கமில்லாத காதல். வாழ்க காதல் வளர்க நட்பு .

Saturday 25 August 2012

Narumugiye - Iruvar Song


Today I am just after a concert of Unnikrishanan at Bowman Hall. It refreshed my memory of one of my favourite movie Iruver. I was so impressed by the richness of Tamil in Iruvar song. Today I got the background information on that song, that made me love that song even more.


  • Singers: Unnikrishnan, Bombay Jayashree
  • Composer: A.R.Rahman
  • Lyrics: Vairamuthu

 

In TamilIn English
MALE:
MALE CHORUS 1:
Narumugaiyae, narumugaiyae,
Nee oru naaligai nillaay,
Sengani ooriya vaay thiranthu,
Nee oru thirumoli sollaay,
MALE CHORUS 2:
Attrai thingal annilavil,
Netrittharala neervadiya,
Kotrappoigai aadiyaval,
Neeyaa?
MALE CHORUS 2
FEMALE:
FEMALE CHORUS 1:
Thirumaganae, thirumaganae,
Nee oru naaligai paaraay,
Vennira puraviyil vandhavanae,
Vaelvili moligal kaelaay,
FEMALE CHORUS 2:
Attrai thingal annilavil,
Kottra poigai aadugaiyil,
Ottra paarvai paartthavanum,
Neeyaa?
FEMALE CHORUS 2
(Instrumental)
MALE:
Manngai maanvili ambugal,
Yen maarthulaithathaena?
Manngai maanvili ambugal,
Yen maarthulaithathaena?
FEMALE:
Paandinaadanai kannai,
Yennudaiya vasanai kondathaena?
MALE:
Nilaavilae paarttha vannam,
Kannaavilae thoandrum innum,
Nilaavilae paarttha vannam,
Kannaavilae thoandrum innum,
FEMALE:
Ilaitthaen, thuditthaen, porukkavillai,
Idaiyinil maegalai irukkavillai,MALE:
MALE CHORUS 1
FEMALE:
FEMALE CHORUS 2
MALE:
MALE CHORUS 2
FEMALE:
Yaayum yaayum yaaraagiyaroe,
Nenju naernthathaena?
Yaayum yaayum yaaraagiyaroe,
Nenju naernthathaena?
MALE:
Yaanum neeyum evvaliyaarithum,
Ooravu saernthathaena?
FEMALE:
Orae oru theendal seiythaay,
Uyirkkodi pootthathaena?
Orae oru theendal seiythaay,
Uyirkkodi pootthathaena?
MALE:
Semboolam saerntha neertthulipole,
Ambudai nenjam kalanthathaena?
FEMALE:
FEMALE CHORUS 1
FEMALE CHORUS 2
MALE:
MALE CHORUS 2
(Female Vocalizing — “Aaahhh”)
Neeyaa?
(Female Vocalizing — “Aaahhh”)
Neeyaa?
(Female Vocalizing — “Aaahhh”)
Neeyaa?
MALE:
MALE CHORUS 1:
O newly blossoming flowerbud, O newly blossoming flowerbud,
Stand here for a moment before me,
Opening your mouth which drips honey,
Reveal your language to me,
MALE CHORUS 2:
Under the full moon night,
As water drips down from your form,
Were you the one in the river?
Were you?
MALE CHORUS 2
FEMALE:
FEMALE CHORUS 1:
O my groom, O my groom,
Look for a moment at me,
You were the one who came riding a white house,
Here the words my arrow-like eyes speak,
FEMALE CHORUS 2:
Under the full moon night,
When I was bathing in the river,
Were you the one who watched me?
Were you?FEMALE CHORUS 2
(Instrumental)
MALE:
What was this that the arrows,
From your deer-eyes pierce my heart?
What was this that the arrows,
From your deer-eyes pierce my heart?
FEMALE:
After seeing the Paandi king,
Why did my body begin to pale?
MALE:
The scene that I saw under the moonlight,
Still haunts me in my dreams,
The scene that I saw under the moonlight,
Still haunts me in my dreams,
FEMALE:
Because my love was not with me, I became lean,
The ornaments on my hip won’t stay in place,
MALE:
MALE CHORUS 1
FEMALE:
FEMALE CHORUS 2
MALE:
MALE CHORUS 2
MALE CHORUS 2
FEMALE:
My family is not known to your family,
Then how did our hearts became one?
My family is not known to your family,
Then how did our hearts became one?
MALE:
I was not known to you,
How was it we came to be thus bonded?
FEMALE:
You touched me only once,
Then how was it my body blossomed?
You touched me only once,
Then how was it my body blossomed?
MALE:
Like the raindrop which joins with the soil,
How was it our hearts were joined like this?
FEMALE:
FEMALE CHORUS 1
FEMALE CHORUS 2
MALE:
MALE CHORUS 2
(Female Vocalizing — “Aaahhh”)
Was it you?
(Female Vocalizing — “Aaahhh”)
Was it you?
(Female Vocalizing — “Aaahhh”)
Was it you?
 
Narumugaye Lyrics from Iruvar
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா (2)
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவநேய் வேல் விழி மொழிகள் கேளாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்த்துளைததென்அ(௨)
பாண்டிநாதனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இழைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் வேதனை இருக்கவில்லை

நறுமுகையே நீயொரு நாழிகை நில்ளாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா

யாயும் யாயும் யாராகியரோஅனென்று நேர்ந்தததென்ன(௨)
யானும் நீயும் எவ்வழியரிடும் உறவு சேர்ந்த்தது என்ன
ஓரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனஎ திருமகனஎ நீ ஒரு நாழிகைப் பாராய்
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் கொற்றபொய்கை ஆடூகயில் ஒற்றப்பார்வை பார்தவனும் நீயா
அட்ரைஇ திங்கள் அந்நிலவில் நெற்றித்தாள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா (2)
 
Narumugiye youtube

 
 
 
 
 

  • "யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

நீயும் யானும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

"உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. பாலை மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன"...சங்கப் பாடல் வரியின் விளக்கம்.

Wednesday 8 August 2012

Thursday 2 August 2012

Qantas phone customer put on hold - for 15 hours

Courtesy: SMH


Outrageous" ... Adelaide businessman Andrew Kahn was put on hold on a call to Qantas for more than 15 hours. Photo: David Mariuz

HOW long is too long to wait on hold? Thirty minutes? One hour? Three hours? Try 15 hours, 40 minutes and one second.

That's how long Adelaide businessman Andrew Kahn waited on hold on his mobile for Qantas from Wednesday night to yesterday morning.

Mr Kahn phoned Qantas at 7.22pm on Wednesday, trying to confirm his travel arrangements for a trip to New York on Sunday. He finally hung up at 11.01am yesterday, having not spoken to anyone.

A recorded message replayed constantly told him someone would speak with him ''as soon as possible''.

''I wanted to find out what exactly they meant would be as soon as possible. I never got an answer. This is outrageous.''

The amount of time on hold would easily allow for a flight from Melbourne to Los Angeles.

Mr Kahn said after he hung up, he called again and managed to speak to someone in customer service, who said he was not even on the flight because of a code error in booking the ticket.

''I've never seen this before in my life. For some stupid reason, this had led to this loop of you being on hold. What a saga,'' Mr Kahn said he was told. He said a second employee, this time from the customer care division, offered to reimburse his call costs if he emailed a copy of his call log.

''I hung up in the end simply because I had had enough,'' said Mr Kahn, a new product developer.

''I wanted to find out what exactly they meant when they said they would be with me as soon as possible.

''Outside of my determination to find out what exactly 'soon' meant, after already waiting for an hour or so, I did not want to lose my place in the queue.

''[Apart from] surfing the net and working, I also managed to read Bazerman and Moore's 7th edition of Judgment in Managerial Decision Making - over 200 pages of advanced masters-level reading.

''It is just about the worst customer service any customer could ever receive.''

The Herald, which did not have to wait as long as Mr Kahn for a response from Qantas, was told by the airline that it had no record of any caller waiting 15 hours to get through to its contact centres.

''In fact, our average contact centre wait time during that period was under a minute and the longest wait time was 17 minutes,'' a spokesman said.

"The passenger's booking had been cancelled due to a system error, but has now been reinstated.

''We are looking into how this could have occurred and apologise for any inconvenience caused."



Monday 23 July 2012

அரங்காடல் - Copy of Thamil Murasu Australia



யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில வருடங்களாக சில ஒன்று கூடல் நிகழ்வுகளை நடாத்தி அதன்மூலம் கிடைக்கும் நிதியினை தம்மை வளப் படுத்திய யாழ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பும் ஒரு நல்ல சேவையை செய்து வருகிறார்கள். அந்த வழியில் இந்த வருடம் சென்ற ஞாயிற்றுக்கிழமை அரங்காடல் நிகழ்வு Paramatta River Side Thiater இல் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. இவ்வருடம் இந்நிகழ்வு Dr . Sithamparakumar தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது என்பதில் எந்தவிதமான ஜயமும் இல்லை.
நிகழ்வினது முதல்க்கட்டமாக இடம் பெற்றது செ.பாஸ்கரனின் நெறியாள்கையில் துயரத்தின் சிரிப்பு என்னும் நாடகம் அதிகம் சிரிக்கவைக்கவில்லை ஆனால் சிந்திக்கவைத்தது.மக்களின் மூடநம்பிக்கைகளையும் தனி மனிதர்களின் சுயநலன்களையும் வெளிக்கொணர்ந்திருந்தது. அருமையான ஒரு கருவை அழகாக வெளிக்கொணர்ந்திருந்தார் தயாரிப்பாளர். நடிகர்கள் ஒருவருக்கொருவர் தாம் சளைத்தவரல்ல என தம் நடிப்புத்திறமையை வெளிக்கொணர்ந்திருந்தார்கள். பல அரங்குகளைக்கண்ட மதுரா மகாதேவ் இந்நாடகம்மூலம் பலர் மனதில் இடம் பிடித்துக்கொண்டார். நிட்சயமாக இன்நாடகத்தில் அவரது நடிப்புத்திறமைக்கு ஒரு சபாஸ்போட்டே ஆக வேண்டும். நாடகத்தில் சாமியாராக வந்த ரமேசின் நடை பேசிய விதம் நிஜத்தில் ஏமாற்றும் சாமியாரை பார்த்ததுபோல் இருந்தது. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அருமையாக நடித்திருந்தார். வைத்தியராக வந்த ரவிசங்கர் ராசையா ஆங்காங்கே மக்களை சிரிக்கவைத்து நகைச்சுவையாக கதையை நகர்த்திச் சென்றார். பல நகைச்சுவைகளை இந்த இருவரும் நயமாகத்தந்தபோதும் கதையின் கனம் துயரத்தை நோக்கியே பயணித்ததால் மக்களால் மனம்திறந்து சிரிக்கமுடியவில்லை.



இளம் தாயாக நடித்த அனுசாவின் நடிப்புத்திறமை இயல்பாகவும் வியப்பாகவும் அமைந்திருந்தது. ஒரு பேதைத் தாயாக அருமையாக நடித்திருந்தார். தந்தையாக வந்த செ.பாஸ்கரனின் நடிப்பு பிரமாதமாக அமைந்திருந்தது. ஒரு கட்டத்தில் மக்களின் கண்களில் கண்ணீரையும் வரவழைத்த நடிப்பு அவரின் நடிப்பாக இருந்தது. இளம் தந்தையாகவும் பின்பு வயதுமுதிர்ந்தவராகவும் மாற்றி மாற்றி நன்றாக நடித்திருந்தார். ஆனாலும் இரண்டுபாத்திரத்திற்கும் ஏற்ப உருவமாற்றத்தோடு குரலையும் நடிப்பின் பாங்கையும் மாற்றியிருக்க வேண்டும் அப்படி மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என்பார்வை. இங்கு குறை என்பது அடுத்த நிகழ்வு நிறைவாக அமைவதற்கே கூறப்படுகிறது. அவ்வாறே இளம்தாயார் அனுசா பைத்தியமாக மாறும் காட்சியை இன்னும் சில நிமிடங்கள் கொடுத்து ஒருவர் திரையில் இருந்து மறைய மற்றவர் அதே நடிப்புடன் வந்திருந்தால் அந்தப்பாத்திரம் இன்னும் நன்றாக மக்களை சென்றடைந்திருக்கும் எனநினைக்கிறேன்.

நோயாளரின் கட்டிலை சற்று முன்புறமாக நகர்த்தி நடிகர்கள் பரவி நின்றிருந்தால் மேடை சமன் செய்யப்பட்டிருக்கும் நெறியாளர் பாஸ்கரன் இதை கவனத்தில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நல்ல பொருத்தமான இசைத்தெரிவும் சரியான நேரத்தில் வந்துசென்றதும் நன்றான இருந்தது. ரொணிக்கு பாராட்டுக்கள்.அதேபோல் ஒளியமைப்பாளர் கரிசும் பொருத்தமாக செய்திருந்தார். புறொபிசர் ரவியைப்பார்த்தபோது யாழ் பல்கலைக்கழக ஞாபகமே வந்தது. அந்த உருவம் பலருக்கும் நினைவிற்கு வந்திருக்கும் என நம்புகிறேன். நான் வந்திற்றன் என்று சொல்லியபடி மேடைக்கு வந்ததே அருமையாக இருந்தது. பப்பு ஜெயச்சந்திரா காருண்ணியா என பாத்திரங்களாக வந்தவர்களும் தங்கள் பாத்திரங்களை மிக அழகாக நகர்தியிருந்தார்கள். நாலுவருடங்களுக்கு முன்பாக கேட்ட அந்த குரல் இன்னும் என்காதுக்குள்ள ஒலிக்குது என்ற ஒரு வசனமே நாடகத்தின் தரத்தை எங்கோ எடுத்துச் சென்றிருந்தது. உண்மையிலேயே துயரத்தின் சிரிப்பாகவே இருந்தது.




  அடுத்துதனுஎன்னும் நாட்டுக்கூத்து மகாபாரதக் கதையின் ஒரு துளி கூத்தாக மேடைக்கு வந்தது. இளையபத்மநாதனின் தயாரிப்பில் அமர்க்களமாக மேடையேறியது. கூத்து அதன்பாணி மேடையேறிய விதம் கதைகூறியவிதம் மேடை அமைப்பு திரை அசைந்த விதம் அன்றைய அதேபாணியில் எம் நாட்டில் அந்தக்காலத்தில் பார்த்த கூத்தை கண்முன் கொண்டுவந்தது என்றால் மிகையாகாது. இந்தவயதிலும் கம்பீரமாக தாளலயத்தோடு நடித்திருந்தார் இளையபத்மநாதன். அந்தக்காலத்திற்கும் இந்தக்காலத்திற்கும் உடையமைப்பில் ஓர்முடிச்சு வீழ்ந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இளையபத்மநாதனின் வாயிலிருந்து சொற்பிரயோகங்கள் மிகவும் அழகாகவும் அறுத்துறுத்தும் மக்களுக்கு விளங்கும் வகையில் அருமையாக வெளிவந்தது. கதைசொன்ன ஸ்ரீபாலன் கருணாகரன் ஆகியோரின் நடிப்பும் திரைஅமைப்பும் அழகாக அமைந்தபோதும் இருவரின் குரல்களும் சேர்ந்தொலிக்க மறுத்ததால் கருப்பொருள் மக்களை வந்தடையவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. இருவரும் மாறிமாறி உரைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. கண்ணா ஸ்ரீபைரவி ஆகியோரின் கூத்துத் திறன் பாராட்டுக்குரியது. நம் நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள்கூட இவ்வளவு அழகாக தமிழில் இத்தனை பாடல்களை மனனம் செய்து அழகுதமிழில் கூறுவார்களா என்ற எண்ணமும் எழுந்தது. அழகுப் பதுமையாக அந்தப்பெண்வந்து பின்பு அவதாரம் மாறுவதை ஒருதிரையின் இருபுறமும் விட்டு காட்ச்சிப்படுத்திய இளையபத்மநாதனின் நெறியாள்கை அருமையானது. புக்கவாத்தியங்கள் மிகவும் அழகாக கூத்திற்கு மெருகூட்டியிருந்தன. அதன் சத்தத்தை சற்று குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நம் கலாசாரத்தில் வந்த கூத்து ஒஸ்ரேலியாவரை நடைபெற்றுக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியதே.


இறுதியாக எங்கட சனங்கள் என்ற நாடகம் Newcastle வாழ்மக்களால் அரங்கேற்றப்பட்டதாக கூறப்பட்டது. சாதாரணமாக எமது அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் விடயங்களை நகைச்சுவையாக தந்திருந்தார்கள். மக்கள் தமது நன்மைக்காக எப்பாடுபட்டும் அதிகம் நன்மையைப் பெற்றுக்கொள்ள பேராசைப்பட்டு அலைவதை நாசூக்காக காட்டியிருந்தது அந்த நாடகம். பெண்வேடத்தில் ஒரு ஆண் அருமையாக நடித்திருந்தார் அதுவும் தியாகேசன் தான் அது என்று தெரிந்தபோது அவரின் நடிப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது. குரல் மட்டுமல்ல நளினமும் இருந்தது. ஆனால் ஏன் ஆண் பெண்வேடம் போட்டார் ஒரு பெண் கிடைக்கவில்லையா? என்ற எண்ணமும் வந்து சென்றது. கணவன் மனைவியாக நடித்தவர்கள் நன்றாகவே நடித்திருந்தார்கள். இவர்கள் வாயில் அகப்பட்ட வைத்தியரும் Tax Agent ரும் பட்ட பாடு நிஜவாழ்க்கையில் பலர் அனுபவித்திருப்பார்கள். எமது பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தமது ஆற்றாமையை திணிப்பதை Selective School Exam கரு காட்டிநின்றது. எல்லோரும் வாய்விட்டு சிரித்தாலும் இதுதான் நடைமுறையில் உள்ளது என்பது உண்மையே.
இந்நாடகம் கொஞ்சம் நீண்டுவிட்டதுபோல் எனக்கு தோன்றியது. அத்துடன் சில நகைச்சுவைகளை நீட்டிமுழக்காமல் நாசூக்காக கூறியிருக்கலாம் எனவும் என்மனதில் பட்டது. மொத்தத்தில் சிரிக்ககூடியதாக இருந்தது.




இந்நிகழ்வில் இடையிடையே திருமதி மிருணாளினி ஜெயமோகனின் நடனங்கள் இடம் பெற்றது. இவர் பல நடன நிகழ்வுகளை மேடையேற்றுமு; ஓர் ஆசிரியர். சிரித்தமுகத்துடன் சளைக்காமல் எம்மவர் கேட்கும்பொழுதெல்லாம் தமது மாணவர்களை பயிற்றுவித்து மேடையேற்றுவார். இம்முறை இவரது மாணவர்கள் மிகவும் நன்றாக ஆடியிருந்தார்கள். நடனத்தை மிகவும் அருமையாக நெறியாள்கை செய்திருந்தார்.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்திய அந்த நிகழ்வு ஒருதரமான நிகழ்வாக இருந்தது. அதற்காக அவர்களை பாராட்டத்தான்வேண்டும். இனிமேலும் தரமான நாடங்களை மேடையேற்றும் முயற்சியில் உழகை;கவேண்டும் என்ற அவாவோடு நிறைவு செய்கிறேன்.