Monday, 17 December 2012

ஏக்கம்


தெருவில் தெரியும் முகங்களில் எல்லாம்

உன்முகத்தை தேடி அலைகின்றேன்

ஆர்பரிக்கும் அலைகடல் அருகிலும்

உன் குரலை கேட்க விளைகின்றேன்

 

வானத்தில் உள்ள நட்சத்திரங்களை

ஒவ்வொன்றாய் எண்ணுகின்றேன்

அதில் உன் கண்சிமிட்டலை தேடுகின்றேன்

உன் காது சிமிக்கியை காண்கின்றேன்

 

இந்த பூமியும் வானும் மறைந்தாலும்

உந்தன் புன்னகை எனைவிட்டு பிரியாது

அந்த காற்றும் மின்னலும் தொலைந்தாலும்

உன் கண்ணசைவு என்னை விட்டு அகலாது

 

கண்ணே உன்னை காணும்மட்டும்

என் கற்பனை உன்நினைவுடன்தான் உறவாடும்

காலங்கள் உருண்டு ஓடினாலும்

உன்கோலங்கள் எனை விட்டகலாது

No comments:

Post a Comment