Friday, 30 November 2012
கல்லுக்குள் ஈரம்
நானும் தம்பியும் பாடசாலை முடிந்து வீடுக்குள் வந்தோம். எமது வீட்டு தென்னை மரத்தில் ஒருவன் தேங்காய் பீடிங்கிகொண்டிருந்தான்.எங்களுக்கு மஹா கோவம். வீடுக்குள் சென்று அப்பாவிடம் முறையிட்டோம். "பசில் தென்னை மரத்தில் ஏறி நிக்கிறான்". அப்பா பெரிதாக அதனை கவனத்தில் எடுக்கவில்லை. எங்களுக்கு இன்னும் கோபம் ஏறியது. திரும்பவும் அப்பாவிடம் வீறிட்டோம். எங்கள் அலறலை தவிர்க்க முடியாமல் அப்பா முன்முத்ததிக்கு போனர். பசில் அப்பாவை கண்டவுடன் தேங்காய் இரண்டு புடுங்கவா என கேட்டான். அப்பா சரி ஆனால் இனி புடுங்ககூடாது என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார்.எங்களுக்கு கோபம் தணியவில்லை. யாராவது மரத்தில் இருந்து கொண்டா தேங்காய் புடுங்க அனுமதி கேட்பார்கள். எங்களுக்கு அப்பா பசில் இருவர் மீதும் கோபம்.
பசில் வேறு யாரும் அல்ல. எமது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறிய வீட்டில் வசிப்பவன். அவன்தான் களுபோவில சண்டியன். ஒரு சண்டியனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது எமக்கு அத்துபடி. கடைகளில் கப்பம் கேட்பது. கப்பம் தராவிட்டால் கடை கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது.குடித்து வந்து சத்தம் போடுவது. போலீஸ் தேடிவந்தால் மதகுக்கு கீழ் ஒழிப்பது. சண்டை பிடித்துவிட்டு இரத்தம் ஒழுக வந்து காயங்களுக்கு மருந்து போடுவது.இவை நாளாந்தம் நடப்பது.
எமது களுபோவில வீடு மிகவிசாலமானது. அது அப்பாவின் quarters.பெரிய இரண்டுமாடி வீடு, பெரிய வளவு. வளவு முழுக்க இரபலா, தென்னை, மாமரம் பாக்கு butterfruit என எல்லாம் இருந்தன. Colomboஇல் அவ்வாறு இருப்பதை யாரும் இப்போது கற்பனை செய்தும் பார்க்க முடியாது.எமது வீட்டில் எராளமான அறைகள். யார் வந்தாலும் தங்க இடம் உண்டு. எமது வீட்டை வராத உறவினர்கள் இல்லை என்றே கூறலாம். ஆனாலும் எனக்கு மிக நெருக்கமான உறவினர்கள் அங்கு வரவில்லை என்பது எனக்கு குறை.அதற்கு அப்பாவின் கோபமே காரணம். பசில் தேங்காய் இரப்பலா புடுங்குவது எங்களுக்கு பிடிக்கவில்லை. அதை தவிர எங்களுக்கு அந்த வீடு சகல வசதிகளும் கொண்டது.
எமது இளமைகாலம் அந்த களுபோவில நகரத்தில்தான். எம்மை தவிர இரண்டு தமிழ் குடும்பங்களே எமது வீதியில் இருந்தன. 1977 election இல் TULF அமோக வெற்றி பெற்றது. புதுஆட்சியில் ஜூலை எதிர்கட்சியாக பதவி ஏற்றது. ஆகஸ்டில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. நாம் பார்க்க களுபோவில hospital டாக்டர் nurse எல்லோருக்கும் நல்ல அடி விழுந்தது. hospital mortuaryயில் panadura மொறட்டுவவில் இருந்து இறந்தவர் சடலங்கள் வந்து நிறைந்தன. நாம் பார்த்துகொண்டிருக்க எமது வீட்டில் இருந்து ஆறு வீடு தள்ளிருந்த தமிழ் பிசினஸ்மானின் வீடு சூறையடபட்டது.வீட்டில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
நாங்கள் பயந்தாலும் எங்களுக்கு அந்த வீட்டை விட்டு எங்கே போவது. நாம் என்ன செய்வது எனறு கலங்கி கொண்டிருக்கையில் பசில் சொல்லாமல் கொள்ளாமல் வீடுக்குள் வந்தான். அப்பா எங்கே என்று கேட்டான். எங்கள்ளுகு கேட்காமல் அவன் வீட்டின்உள்ளே வந்தது சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பாவிடம் திமிராக நான் உங்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துகொள்கின்றேன் என்று கூறிவிட்டு போய்விட்டான். எங்களுக்கு அவனை நம்புவதா இல்லை நாடகம் ஆடுகின்றனா என்று விளங்கவில்லை.
இப்படியே இரண்டு நாள் கழிந்தது. மறுநாள் இரவு எமது வீட்டை சுற்றி வாள், பொல்லு நெருப்பு பந்தங்கள்உடன் 20க்கு மேற்பட்ட காடையர்கள் ஜன்னல் உடாக தெரிந்தனர். ஒரே சத்தம். நாம் உயிரை கையில் பிடித்துகொண்டு அவதானித்தோம். பசிலின் சத்தமும் பெரிதாக கேட்டது. அதைவிட ஊராரின் சத்தமும் கேட்டது. அன்று இரவு அப்படியே கழிந்தது.
அடுத்தநாள் காலை பசில் வீட்டினுள் வந்தான். அப்பாவிடம் மாத்தையா இரவு விகாரலேன்இல் இருந்து உங்களை கொல்ல கடையார் வந்தார்கள். நானும் உரரரும் தடுத்து நிறுத்திவிட்டோம். எங்களை கொல்வதனால் அதை எம்உரர்தான் செய்யவேண்டும். விகாரலேன்இல் இருந்து நீங்கள் வரதேவையில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டோம். இன்று இரவு அவர்கள் மீண்டும் வருவார்கள். அப்போது உங்களை நாங்கள் காப்பாற்றமுடியாது . எனவே போவதற்கு ஏற்பாடுசெய்யுங்கள் என்று கூறினான்.அதன்பின்னர் அப்பா அவனுடையே போலீஸ்ஸ்டேஷன் சென்று போலீஸ் ஜீப் எங்களுக்கு காவலுக்கு வர நாங்கள் பம்பலபிடிய சரஸ்வதிஹால் அகதிமுகாம் சென்று அடைந்தோம்.
சண்டியன் என்று நாம் அன்றாடம் வெறுத்தவனுடைய மனிதம் என்மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எவ்வளவு எளியவனாக இருந்தாலும் சுற்றம் ஆகிய எம்மை அவன் இயன்றவரை பாதுகாற்றது மறக்கமுடியாதது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment