தெருவில் தெரியும் முகங்களில் எல்லாம்
உன்முகத்தை தேடி அலைகின்றேன்
ஆர்பரிக்கும் அலைகடல் அருகிலும்
உன் குரலை கேட்க விளைகின்றேன்
வானத்தில் உள்ள நட்சத்திரங்களை
ஒவ்வொன்றாய் எண்ணுகின்றேன்
அதில்
உன்
கண்சிமிட்டலை தேடுகின்றேன்
உன்
காது
சிமிக்கியை காண்கின்றேன்
இந்த
பூமியும் வானும்
மறைந்தாலும்
உந்தன்
புன்னகை எனைவிட்டு பிரியாது
அந்த
காற்றும் மின்னலும் தொலைந்தாலும்
உன்
கண்ணசைவு என்னை
விட்டு
அகலாது
கண்ணே
உன்னை
காணும்மட்டும்
என்
கற்பனை
உன்நினைவுடன்தான் உறவாடும்
காலங்கள் உருண்டு ஓடினாலும்
உன்கோலங்கள் எனை
விட்டகலாது